/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி; அழைக்கிறது தீயணைப்பு துறை
/
தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி; அழைக்கிறது தீயணைப்பு துறை
தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி; அழைக்கிறது தீயணைப்பு துறை
தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி; அழைக்கிறது தீயணைப்பு துறை
ADDED : அக் 10, 2025 10:44 PM
கோவை; தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப, 'வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற முயற்சியை துவக்கியுள்ளது.
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி அறிக்கை:
பொதுமக்களை அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு அழைத்து, அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில், இவ்விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுக்க உள்ள, 375 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களில் உள்ள பணியாளர்கள் நாளை(இன்று அக். 11), நாளை மறுதினம் (அக். 12) ஆகிய இரு நாட்கள் தீயணைப்பு நிலையத்துக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்துவர்.
ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற விகிதத்தில், காலை 10 முதல் 11 மணி வரை, மதியம் 12 முதல் 1 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை பயிற்சி நடைபெறும். இத்திட்டம் இலவசம்; முன்பதிவு இல்லை.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.