/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 10, 2025 10:44 PM
மகோற்சவம் கோவைப்புதுார், கிளப் ரோடு, ஸ்ரீ சங்கர கிருபா அமைப்பு சார்பில் மகோற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. கர்நாடிக் பாடகர் உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் ஆன்மிக இசை நிகழ்ச்சி, மாலை 5.30 மணி முதல் நடக்கிறது.
பகவத்கீதை சத்சங்கம் மலுமிச்சம்பட்டி ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில், பகவத்கீதை சத்சங்கம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இரண்டு நாள் நிகழ்வில், ஆத்ம வித்யாலயம் ஆச்சாரியார்கள் சத்சங்கத்தை வழங்குகின்றனர்.
தேசிய மாநாடு நவக்கரை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில், 'செயற்கை நுண்ணறிவு: இயந்திர கற்றல் மற்றும் கம்யூட்டிங் ஆற்றல் 'குறித்த தேசிய மாநாடு நடக்கிறது. காலை 10 மணிக்கு நடக்கும் மாநாட்டில் கணினியல் வல்லுனர்கள் உரையாற்றுகின்றனர்.
பட்டமளிப்பு விழா டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் 25வது பட்டமளிப்பு விழா, காலை 10 மணிக்கு நடக்கிறது. ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., தெற்கு மண்டல இயக்குனர் சுதாகர் ரெட்டி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
விருதுகள் வழங்கும் விழா பாலக்காடு, சத்குரு யோகாஸ்ரமம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும், சத்குரு யோக வித்யாலயம் சார்பில், 18வது தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடக்கிறது. சிங்காநல்லுார், ஸ்ரீ சாய் விவாஹ மஹாலில் காலை 11.50 மணி முதல் நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலைமையம் சார்பில் கும்பகோணம் அரசு நுண்கலை கல்லுாரி மாணவர்களின் ஓவிய கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையத்தில் காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை, கண்காட்சி நடக்கிறது.
ரத்ததான முகாம் இன்டராக்ட் கிளப் எஸ்.வி.ஜி.வி., பிரண்ட்லி பார்ச்சூன் மற்றும் காரமடை ரோட்டரி சங்கம் இணைந்து, ரத்ததான முகாமை நடத்துகின்றன. மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை, எஸ்.வி.வி., பள்ளியில் காலை 8.30 முதல் மதியம் 12.30 மணி வரை ரத்ததான முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.