/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலமுறை சம்பளம் வழங்கணும்; பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
/
காலமுறை சம்பளம் வழங்கணும்; பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
காலமுறை சம்பளம் வழங்கணும்; பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
காலமுறை சம்பளம் வழங்கணும்; பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : அக் 10, 2025 10:44 PM
கோவை; 'அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் கூடிய காலமுறை சம்பளம் நிர்ணயித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோவையில் கூறியதாவது:
கடந்த காலங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள், காலமுறை சம்பளத்தில் நிரந்தரம் செய்யப்பட்டனர்.
அதேபோல், 2012 முதல் அதே பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் காலமுறை சம்பளம் வழங்கி, பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும்.
ரூ.20,600ஐ அடிப்படை சம்பளமாக நிர்ணயித்து, பகுதிநேர ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.