தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொழிவிழந்த விளையாட்டு மைதானம்; போட்டிகள் நடத்த முடியாமல் தவிப்பு

பொழிவிழந்த விளையாட்டு மைதானம்; போட்டிகள் நடத்த முடியாமல் தவிப்பு

பொழிவிழந்த விளையாட்டு மைதானம்; போட்டிகள் நடத்த முடியாமல் தவிப்பு


ADDED : ஜன 14, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில், விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறை நகரில், சிறுவர் பூங்கா அருகே நகராட்சிக்கு சொந்தமான விளை யாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. வால்பாறை கால்பந்து சங்கத்தின் சார்பில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படாததால், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து, பா.ஜ., விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன் கூறியதாவது:

விளையாட்டு வீரர்களை உருவாக்கிய நகராட்சி விளையாட்டு மைதானம், சமீப காலமாக பொலிவிழந்து காணப்படுகிறது. இந்நிலையில், திராவிட பொங்கல் விழா நடத்துவதற்காக மைதானத்தை சுத்தம் செய்த நகராட்சி அதிகாரிகளை கண்டிக்கிறோம்.

விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, போட்டிகள் நடத்த வசதியாக நகராட்சி சார்பில் விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைத்து, போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.

நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விளையாட்டு மைதானத்தை மழை காரணமாக சீரமைக்க முடியவில்லை. தற்போது, வெயில் நிலவுவதால் மைதானத்தை சீரமைத்து, உரிய அடிப்படை வசதிகள் செய்ய நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கபட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us