ADDED : மார் 16, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
சோமனுார்: சோமனூர் பவர் ஹவுஸ் டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கருமத்தம்பட்டி --- சோமனுார் ரோட்டில், மின்வாரிய கோட்ட அலுவலகம் மற்றும் பவர் ஹவுஸ் உள்ளது. இங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் நேற்று மதியம் கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிய துவங்கியது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக மின்சாரம் துண்டித்து, கருமத்தம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்; விசைத்தறிகள் இயங்கவில்லை. சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்துக்கு பின்பே, மின்விநியோகம் சீரானது.
