நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: மதுக்கரை - நீலம்பூர் பை-பாஸ் ரோடு, வடக்கு தோட்டத்தில் சாந்தகுமார் என்பவரது மின்விசிறி உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
நேற்று மதியம் தொழிற்சாலை முன் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீ பிடித்தது. தொடர்ந்து உதிரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் பரவியது. கிணத்துகடவு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

