/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தார் பேரலை பற்றியது தீ; தொற்றியது பீதி
/
தார் பேரலை பற்றியது தீ; தொற்றியது பீதி
ADDED : மார் 20, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:உக்கடம் -- ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதில் கட்டுமானம் முடிவடைந்த பகுதிகளில், பெயின்ட் அடிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று கரும்புக்கடை பகுதியில், சாலையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தோர், தார் இளக, தீ பற்றவைத்தனர். எதிர்பாராவிதமாக தீ, பேரல் முழுமையும் பற்றி எரிந்தது. கரும்புகை கிளம்பியது. இதனைக் கண்ட அவ்வழியே வாகனங்களில் சென்றோர் பீதியடைந்தனர்.
தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் பலனில்லை. தார் முற்றிலும் எரிந்தது. இதனால் அவ்விடத்தில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

