ADDED : மார் 22, 2026 08:05 PM
கோவை: மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், 140 பள்ளிகளில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத்தறை சார்பில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதில், நெருப்பு பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பாக இருப்பது, சிலிண்டர் விபத்து முன்னெச்சரிக்கை, மின்சாதனங்களில் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கணேசன் கூறுகையில், '' தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டில் 14 நிலையங்கள் உள்ளன. ஒரு தீயணைப்பு நிலையத்துக்கு, 10 பள்ளிகள் வீதம், 140 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் ஐந்து இடங்களை பிடித்த 700 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன, '' என்றார்.
