/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை
/
அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை
ADDED : ஏப் 17, 2025 10:46 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீத்தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, தீயணைப்பு நிலை அலுவலர் கணபதி முன்னிலை வகித்தனர்.
அப்போது, தீ விபத்து ஏற்பட்டால் மீட்பது, ஆற்று நீரில் மூழ்கியவரை மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீயணைப்பு நிலை அலுவலர் கூறியதாவது:
தீத்தொண்டு நாள் வாரம் வரும், 20ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமையல் செய்து முடித்தவுடன் காஸ் அடுப்பின் ரெகுலேட்டரை அணைத்துவிட வேண்டும். ஆடையில் தீப்பிடித்தால், கீழே படுத்து தரையில் உருள வேண்டும். பின் குளிர்ந்த நீரை தீக்காயங்களில் ஊற்ற வேண்டும்.
மின்சார தீ விபத்து ஏற்படாமல் இருக்க தரமான மின் உபகரணங்களையும், ஒயர்களையும் பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் தீ பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து காலமுறையில் ஆய்வு செய்ய வேண்டும்.
அடுக்குமாடி கட்டடங்களில் உயர் தரமான தீ பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க புகையோ, நெருப்போ தென்பட்டவுடன் பேட்டரி ஒயர்களை கழற்றி விட வேண்டும்.
குடியிருப்பில் வசிப்போர், வெளியூர் செல்லும் நேரங்களில் மெயின் சுவிட்ச்சை ஆப் செய்ய வேண்டும். இன்வர்ட்டர், பேட்டரிகளை கவனமுடன் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.