/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
/
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
ADDED : செப் 30, 2024 05:29 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, தலைமை அரசு மருத்துவமனையில், தீயணைப்பு துறையினர், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு இரு முறை, தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று, பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கணபதி தலைமை வகித்தார்.
மருத்துவமனை வளாகத்தில், எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்வது; தீ விபத்து ஏற்பட்டால், விரைந்து செயல்பட்டு அதை அணைப்பது குறித்து, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.
நிலை மருத்துவ அலுவலர் மாரிமுத்து, மருத்துவ பிரிவு தலைமை மருத்துவர் வனஜா, குழந்தைகள் நல தலைமை மருத்துவர் செல்வராஜ், செவிலியர் கண்காணிப்பாளர் பொன்னேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, தரக்கட்டுப்பாட்டு குழு செவிலியர்கள் லாவண்யா, அனுராதா, தனியார் நிறுவன மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.