ADDED : பிப் 10, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
கோவை: தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி, தீயணைப்பு துறையினரால் வழங்கப்பட்டது.
பயிற்சியில், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும், 20 பாதுகாவலர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு நிறுவனங்களில் தீ விபத்து எப்போது ஏற்படும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீவிபத்து ஏற்பட்டால், தீத்தடுப்பு கருவிகளை கையாளும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் பொருட்கள், அவற்றை கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சிக்கு பின் பாதுகாவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் அழகர்சாமி, ராமசந்திரன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
