/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெருப்போடு விளையாடிய தீப்பந்த சிலம்பாட்டம்
/
நெருப்போடு விளையாடிய தீப்பந்த சிலம்பாட்டம்
ADDED : டிச 16, 2024 12:13 AM

கோவை; கோவையில் சின்னஞ்சிறு குழந்தைகள் 350 பேர் பங்கேற்ற, தீப்பந்த சிலம்பாட்ட சாதனை போட்டி முயற்சி, நேற்று நடந்தது.
கோவை சிட்ரா அருகில் உள்ள பிராட்வேயில் டெகத்லான், வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளி, பிராட்வே சார்பில் நோபல் உலக சாதனை போட்டி நேற்று நடந்தது. இதில் ஒற்றை கம்பில் இரட்டை தீப்பந்தங்கள் கொண்ட, சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடந்தது.
முதல் கட்டமாக 4 முதல் 8 வயதுக்கு உட்பட்ட 150 குழந்தைகள், 10 நிமிடங்கள் சிலம்ப பந்தங்களை சுழற்றினர். குழந்தைகள் நட்சத்திர வடிவில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அடுத்ததாக, 8 முனைகள் கொண்ட இரட்டை நட்சத்திர வடிவ பந்தங்களை சுழற்றினர். 10 வயதுக்கு மேற்பட்ட 200 குழந்தைகள் பங்கேற்றனர்.
வீரவர்மன் சிலம்ப பயிற்சி பள்ளி பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நெருப்பையும் பாதுகாப்பாக கையாள முடியும் என்பதை உணர்த்தவும், உலக அளவில் சிலம்பாட்ட கலையை கொண்டு செல்லவும், இந்த நிகழ்வை நடத்தியுள்ளோம்,'' என்றார்.

