/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு வெடித்த விவகாரம்: இருவருக்கு கத்திக்குத்து
/
பட்டாசு வெடித்த விவகாரம்: இருவருக்கு கத்திக்குத்து
பட்டாசு வெடித்த விவகாரம்: இருவருக்கு கத்திக்குத்து
பட்டாசு வெடித்த விவகாரம்: இருவருக்கு கத்திக்குத்து
ADDED : அக் 30, 2025 11:25 PM
கோவை:  நள்ளிரவில் பட்டாசு வெடித்ததை தட்டி கேட்ட இருவரை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சரவணம்பட்டி, விநாயகர்புரம், சங்கரா நகரை சேர்ந்தவர் கருணாகரன்,27; சி.என்.சி.மெஷின் ஆபரேட்டர். நேற்று முன்தினம்  நள்ளிரவில், அவரது வீட்டு முன், 9 பேர் கும்பலாக கூடிநின்று பட்டாசு வெடித்து பிறந்த நாள் கொண்டாடினர். அவர்கள் கூச்சலிட்டபடி இருந்ததால், வீட்டில் துாங்கி கொண்டிருந்த கருணாகரன், பக்கத்து வீட்டை சேர்ந்த பாக்யராஜ்,45, ஆகியோர் வெளியே எழுந்து வந்து சத்தம் போட்டனர்.
இதனால் அவர்களுக்கிடையை தகராறு ஏற்பட்டது. அப்போது, அடையாளம் தெரியாத சிலர், பாக்யராஜ், கருணாகரனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிவு செய்து தப்பிய ஒன்பது பேரை தேடி வருகின்றனர்.

