ADDED : அக் 19, 2025 10:58 PM

கோவை: இன்று தீபாவளி பண்டிகை. வண்ணமயமான வெடிகளை வெடித்து ரசிக்கும் ஆவலில், குழந்தைகள் சில சமயங்களில் பாதுகாப்பு விதிகளை மறந்து, தவறு செய்ய நேரிடும்.
குறிப்பாக, 'கம்பிமத்தாப்பு' , வண்ணமயமான புகையை உருவாக்கும், 'பயர் ஸ்மோக் பட்டாசு'போன்ற, அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளை வெடிக்கும்போது, ஆபத்து அதிகரிக்கிறது.
கம்பிமத்தாப்பின் வண்ண ஒளியை ரசிக்கும் ஆர்வத்தில், குழந்தைகள் தங்களை மறந்து அவற்றை முகத்திற்கு மிக அருகில், கொண்டு சென்று விடுகின்றனர். கம்பிமத்தாப்புகளில் இருந்து வெளிவரும் அதிக புகை, குழந்தைகளின் மென்மையான கண்களில் எரிச்சலையும், சுவாச கோளாறுகளையும் எளிதில் ஏற்படுத்தும்.
அதிலிருந்து சிதறும் தீப்பொறிகள், முகத்திலோ அல்லது கண்களிலோ பட நேர்ந்தால், அது தீவிரமான காயங்களுக்கு வழிவகுக்கும். எனவே, பட்டாசு வெடிக்கும்போது, குறிப்பாக கம்பிமத்தாப்பு போன்றவற்றை கையில் ஏந்தும்போது, அவற்றை முகத்திற்கு அருகாமையில் கொண்டு செல்லக்கூடாது என்பதையும், கைகளை நன்கு நீட்டிப் பிடிக்க வேண்டும் என்பதையும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.