/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு
/
மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு
ADDED : அக் 19, 2025 10:57 PM

கோவை: கோவையில் விட்டு விட்டு பெய்யும் மழையால், சாலையோரவியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்கு பொருட்கள் வாங்க ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், கிராஸ்கட் மற்றும், 100 அடி ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில், பண்டிகைக்கான பொருட்கள் வாங்க, நேற்று பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதால் மழை பெய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள்பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர்.
பலர் மழைக்கு ஒதுங்க இடம் இல்லாமல், நனைந்தபடி சென்றனர். ஜவுளிக்கடைகளுக்குள் சென்றவர்கள் வெளியில் வரமுடியாமல் தவித்தனர். தீபாவளி வியாபாரத்தை நம்பி கடை வைத்து இருந்த சாலை வியாபாரிகள், பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.