/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அட! நிஜமாத்தான்...நம்புங்க! தண்ணீருக்குள் மத்தாப்பு கொளுத்தலாம்!
/
அட! நிஜமாத்தான்...நம்புங்க! தண்ணீருக்குள் மத்தாப்பு கொளுத்தலாம்!
அட! நிஜமாத்தான்...நம்புங்க! தண்ணீருக்குள் மத்தாப்பு கொளுத்தலாம்!
அட! நிஜமாத்தான்...நம்புங்க! தண்ணீருக்குள் மத்தாப்பு கொளுத்தலாம்!
ADDED : அக் 19, 2025 10:57 PM

கோவை: தீபாவளிக்கு ஜில், ஜங், ஜக், செல்பி, திரிசூல் என, குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் குஷிப்படுத்த அணிவகுத்துள்ளன பட்டாசுகள்.
செல்பி பட்டாசு மொபைலில் செல்பி எடுக்க ஆரம்பித்தால் அவ்வளவு லேசில் நிறுத்துவதில்லை. அப்படித்தான் இந்த பட்டாசை கொளுத்தினால், மூன்று நிமிடங்கள் வரை, 100 ஷார்ட்கள் வெடிக்கும். பேன்ஸி ரகமான இந்த பட்டாசு, வானத்தில் பூவாய் விரிந்து வெடிக்கும்.
திரிசூல் திரிசூலத்துக்கு மூன்று முனைகள் இருக்கும். அதுபோல இந்த பட்டாசை கொளுத்தினால், மூன்றாக விரிந்து வானத்தில் சென்று வெடிக்கும்.
ஹெலிகாப்டர் ஹெலிகாப்டர் தரையில் இருந்த இடத்தில் இருந்தே, மேல் எழும்பி பறக்கும். அது போலத்தான் இந்த வெடியும். பற்ற வைத்ததும், கீழிருந்து மேலே சுற்றிக் கொண்டே செல்லும்.
ஆதித்யா 72 விண்வெளித்துறையில் இஸ்ரோ, பல்வேறு புதிய வரலாறுகளை படைத்து வருகிறது. அதில் ஒரு மைல்கல்தான் ஆதித்யா - எல்1. ஆதித்யா விண்கலத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆதித்யா, 72 பட்டாசு அறிமுகமாகியுள்ளது.
வாட்டர் புரூப் கம்பி மத்தாப்பு பட்டாசுகளை தண்ணீரில் நனைத்தால், அதை துாக்கி குப்பைத் தொட்டியில் போட வேண்டியது தான். ஆனால், புதிதாக வந்துள்ள வாட்டர் புரூப் கம்பி மத்தாப்பை, தண்ணீருக்குள்ளேயே கொளுத்தலாமாம்.
ஸ்வஸ்திக் ஸ்வஸ்திக் என்பது நான்கு முனைகளை கொண்டது. அதேபோல், இந்த பட்டாசில் நான்கு திரிகள் இருக்கும். கொளுத்தினால் அதில் உள்ள சக்கரம், ஒவ்வொன்றாக சுழலத்துவங்கும்.
இப்படி பல்வேறு ரகங்களில், புதிய பட்டாசுகள் விற்பனைக்கு அணிவகுத்துள்ளன. நேற்று வரை வாங்காதவர்கள், இப்போதே புறப்பட்டுச்சென்று வாங்கி வெடித்து மகிழலாம்!