/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு செயல்விளக்கம்
/
தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு செயல்விளக்கம்
ADDED : செப் 01, 2025 10:15 PM

வால்பாறை,; வால்பாறை அரசினர் தொழில் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு, தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு குறித்து செயல்விளக்கம் காண்பித்தனர்.
வால்பாறை அரசினர் தொழில்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு, தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை தொழில்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் துவக்கி வைத்து பேசினார். தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பாக நடந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரகாஷ்ராஜ் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் செயல்விளக்கம் காண்பித்தனர். தீ விபத்தின் போது எப்படி பாதுகாத்துக்கொள்வது என்றும், இயற்கை சீற்றத்தின் போது மழை வெள்ளத்தில் சிக்கியவங்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் செயல்விளக்கம் காண்பித்தனர்.
மேலும், வீடு மற்றும் கடைகளில் காஸ் சிலிண்டரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்தும் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறை வீரர்கள், அரசினர் தொழில்பயிற்சி நிலைய பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.