/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு பொதுமக்கள் பார்த்து வெடிக்கணும் பட்டாசு!: தீயணைப்புத்துறை 'அலர்ட்'
/
தீபாவளிக்கு பொதுமக்கள் பார்த்து வெடிக்கணும் பட்டாசு!: தீயணைப்புத்துறை 'அலர்ட்'
தீபாவளிக்கு பொதுமக்கள் பார்த்து வெடிக்கணும் பட்டாசு!: தீயணைப்புத்துறை 'அலர்ட்'
தீபாவளிக்கு பொதுமக்கள் பார்த்து வெடிக்கணும் பட்டாசு!: தீயணைப்புத்துறை 'அலர்ட்'
ADDED : அக் 26, 2024 11:16 PM

கோவை: தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதையடுத்து, கோவை தீயணைப்பு துறையினர் தீ விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொது மக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவை தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் கூறியதாவது:
n பட்டாக பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அட்டை பெட்டிகளின் மீது, பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை, கவனமாக படித்துப் பின்பற்ற வேண்டும்.
n பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்புக்கு தண்ணீர், மணல் வாளிகளை அருகில் வைக்க வேண்டும். கம்பி மத்தாப்பு, சங்குசக்கரம் வெடித்த பின் தண்ணீரில் நனைத்தோ அல்லது உலர்ந்த மணலில் மூடி வைக்க வேண்டும்.
n வீட்டின் அருகிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பட்டாசு வெடிக்கும் போது வீட்டு ஜன்னல், கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
n குழந்தைகள், பெற்றோர்களின் முன்னிலையில் பட்டாசு வெடிக்க வேண்டும். திறந்த வெளி மைதானத்தில் வெடிப்பது நல்லது. குடிசைப் பகுதியில் ராக்கெட் மற்றும் வெடி பொருட்களை உபயோகிக்கக் கூடாது. கம்பி மத்தாப்பு மற்றும் புஸ்வாணத்தை பாதுகாப்பான துாரத்தில் வைத்து கொளுத்த வேண்டும்.
n பட்டாசு வெடிக்கும் சமயங்களில் பாதுகாப்பிற்காக, இறுக்கமான பருத்தி ஆடைகள் மற்றும் காலணிகள் அணிவது நல்லது. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரை தீக்காயத்தின் மேல் எரிச்சல் அடங்கும் வரை, ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
n வெடிக்காத பட்டாசுகளை சேகரித்து மீண்டும் வெடிக்க முயற்சிக்காதீர்கள். சிம்னி விளக்கு, ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு அருகே, பட்டாசுப் பொருட்களை வைக்காதீர்கள். வீட்டிற்குள் கண்டிப்பாக கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசுப் பொருட்களை கொளுத்தக் கூடாது.
n அதிக சத்தம் எழுப்பும் அணுகுண்டு, வெடி பட்டாசுகளை வெடிக்கும்போது, குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்காதீர்கள். குடிசைகள் நிறைந்த பகுதிகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் மற்றும் முதியோர் இல்லம் இருக்கும் பகுதிகளில், ராக்கெட் மற்றும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
n வாணவெடிகளை தவிர்க்கவும். அவசர உதவிக்கும், ஆலோசனைக்கும் தீயணைப்பு - மீட்பு துறையினரை அணுகலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.