/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நித்தீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
/
நித்தீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
ADDED : மே 10, 2025 02:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம் : நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு விழா நடந்தது.
நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில், அதிகாலையில், மங்கள இசை, கலச பூஜைகள் மற்றும் மூலமந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பின், சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், நெகமம் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, சுவாமி திருவீதி உலா நடந்தது.