/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்கழி மாதம் முதல் நாள்... கோயிலில் பக்தர்கள் பரவசம்
/
மார்கழி மாதம் முதல் நாள்... கோயிலில் பக்தர்கள் பரவசம்
மார்கழி மாதம் முதல் நாள்... கோயிலில் பக்தர்கள் பரவசம்
மார்கழி மாதம் முதல் நாள்... கோயிலில் பக்தர்கள் பரவசம்
ADDED : டிச 17, 2025 05:12 AM

பெ.நா.பாளையம்: மார்கழி மாத முதல் நாளையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், நேற்று அதிகாலை பெருமாள் கோயில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
மார்கழி மாதத்தின் அனைத்து நாட்களிலும், அதிகாலை பெருமாள் கோயில்களில் ஆண்டாள் திருப்பாவை பாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் நேற்று மார்கழி மாத முதல் நாளையொட்டி பெருமாள் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சின்ன தடாகம் புதூரில் உள்ள, ஸ்ரீ சக்தி சித்த செல்வ விநாயகர் கோவிலில் மார்கழி மாத முதல் நாளையொட்டி, பெருமாள் திருவுருவ படங்களை ஏந்தியபடி பெண்கள் முன்னே செல்ல, பஜனை கோஷ்டி முக்கிய வீதிகளில் உலா வந்தது.
சின்னதடாகம், நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோயில்கள், பாலமலை ரங்கநாதர் கோயில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோயில், ராவுத்துக்கொல்லனூர் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் அதிகாலை சிறப்பு பூஜை, பஜனை நடந்தன.
காரமடையில் மார்கழி
பஜனை ஊர்வலம்
காரமடையில், சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழு, தாசபளஞ்சிக மகாஜன சங்க திருப்பாவை பஜனை வழிபாட்டு குழு, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் முருக பக்தர்கள் பஜனை குழு ஆகிய மூன்று பஜனை குழுவினர் உள்ளனர். நேற்று மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து, அரங்கநாதர் கோவில் முன்பு இருந்து, தாசபளஞ்சிக மகாஜன சங்க திருப்பாவை பஜனை வழிபாட்டு குழுவினர், தலைவர் கோவிந்தன் தலைமையில், தேர் செல்லும் நான்கு ரத வீதிகள் வழியாக, பஜனை பாடி சென்றனர். இதே போன்று, சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழுவினர், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் முருக பக்தர்கள் குழுவினர் பஜனை பாடி சென்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

