/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலாவது டிவிஷன் கிரிக்கெட்; எஸ்.என்.ஆர்., வீரர் 'சதம்'
/
முதலாவது டிவிஷன் கிரிக்கெட்; எஸ்.என்.ஆர்., வீரர் 'சதம்'
முதலாவது டிவிஷன் கிரிக்கெட்; எஸ்.என்.ஆர்., வீரர் 'சதம்'
முதலாவது டிவிஷன் கிரிக்கெட்; எஸ்.என்.ஆர்., வீரர் 'சதம்'
ADDED : ஜூலை 13, 2025 11:38 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் முதலாவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் டிரஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, எஸ்.என்.ஆர்., அணியினர், 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 245 ரன்கள் எடுத்தனர். வீரர் நிகில் கேம்கா, 101 ரன்களும், மோகன் பிரசாந்த், 64 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் பொன்முரளி மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய ஆர்.கே.எஸ்., அணியினர், 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 217 ரன்கள் எடுத்தனர். வீரர் பாலதரன், 36 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் மோகன் பிரசாந்த் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.