/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல் பட்டமளிப்பு விழா
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல் பட்டமளிப்பு விழா
ADDED : அக் 29, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறையில் அரசினர் தொழில்பயிற்சி நிலையம் கடந்த, 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது. பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ், மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்பிடிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குணசேகரன் தலைமையில் நடந்தது. பயிற்சி அலுவலர் நடராஜன் வரவேற்றார்.
விழாவில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் ரகுராமன், அரசு கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். முதல் கட்டமாக, 51 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.