ADDED : அக் 28, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பள்ளிக் கல்வித்துறை வாயிலாக, மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், 19 வயது மாணவியர் பிரிவு வட்டு எறிதலில், ஆனைமலை வி.ஆர்.டி., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஜபுநிஷா முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து, ஈரோட்டில் நடக்கும் மாநில போட்டிக்கும் தகுதி பெற்றார். இவரை, பள்ளித் தலைமையாசிரியர் சுமதி, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.