/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுசிகா நதிக்கு புத்துயிர் ஊட்ட முதல் கட்ட சர்வே நிறைவு
/
கவுசிகா நதிக்கு புத்துயிர் ஊட்ட முதல் கட்ட சர்வே நிறைவு
கவுசிகா நதிக்கு புத்துயிர் ஊட்ட முதல் கட்ட சர்வே நிறைவு
கவுசிகா நதிக்கு புத்துயிர் ஊட்ட முதல் கட்ட சர்வே நிறைவு
ADDED : ஜன 24, 2025 10:52 PM
கோவில்பாளையம்; கவுசிகா நதி புனரமைப்புக்கான முதல் கட்ட சர்வே முடிவடைந்தது.
கோவையின் மேற்குப் பகுதியில், குருடி மலையில் துவங்கி, இடிகரை, அத்திப்பாளையம், வையம்பாளையம், கோவில் பாளையம், தேவம்பாளையம் வழியாக, திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலில் கவுசிகா நதி இணைகிறது. மலைப்பொழிவு குறைவாலும், பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும் கவுசிகா நதியின் ஓட்டம் பல இடங்களில் இல்லை. மழைக்காலங்களில் வழித்தடங்களில் மழை நீர் செல்கிறது. கவுசிகா நதியை முழுமையாக மீட்க வேண்டும் என கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பு ஆறு ஆண்டுகளாக போராடி வருகிறது.
இந்நிலையில் கவுசிகா நதி சீரமைப்புக்காக, ரோட்டரி மாவட்டம் 3201 உடன் இணைந்து நில அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இப்பணி கடந்த அக்டோபரில் துவங்கியது.
முதல் கட்டமாக வையம்பாளையம் முதல் தேவம்பாளையம் வரை, ஆறு கி.மீ., தூரத்திற்கு நில அளவீடு பணி நடந்தது.
இதில் தேவையான பணிகள், தொழில்நுட்பங்கள் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மொத்தம் 20 கி.மீ., தூரத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. முதல் கட்ட விரிவான திட்ட அறிக்கையை ரோட்டரி மாவட்ட கவர்னர் சுந்தரவடிவேலு, கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் தலைவர் செல்வராஜிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யதீஸ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
'நவீன உபகரணங்களைக் கொண்டு, முழுமையாக 20 கி.மீ., தொலைவிற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், மதிப்பீடு, அனைத்தும் தயாரிக்கப்பட்டு விரைவில் முழுமையான திட்ட அறிக்கை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பிடம் வழங்கப்படும்,' என ரோட்டரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

