/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவில் முதலிடம்; மாணவருக்கு பாராட்டு
/
தேசிய அளவில் முதலிடம்; மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 24, 2025 09:23 PM

போத்தனுார்; கோவை, சுந்தராபுரம் முதலியார் வீதியை சேர்ந்த இளங்கோவன், திவ்யபிரியா தம்பதியின் மகன் ஹரிஷ். சுந்தராபுரம் விஸ்வேஸ்வரா பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த எட்டாண்டுகளாக கூடோ, கிக் பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று வருகிறார்.
கடந்தாண்டு குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான கூடோ போட்டியில் பங்கேற்று, முதலிடம் பிடித்து, தங்கபதக்கம் வென்றார்.
இந்நிலையில் கடந்த, 22ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழாவில், ஹரிஷுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர் ஹரிஷ் இதற்கு முன்பாக நடந்த தேசிய அளவிலான கூடோ போட்டியில் இரண்டாமிடமும், கிக் பாக்ஸிங்கில் மூன்றாமிடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.