/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயரம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம்
/
உயரம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம்
ADDED : நவ 18, 2025 03:24 AM

அன்னுார்: அன்னுார் மாணவி உயரம் தாண்டும் போட்டியில், தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், குறுமைய அளவிலும், மாவட்ட அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் கணேசபுரம், புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அனுஸ்ரீ 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்றார். இதில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து, இம் மாணவி, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சாதித்த மாணவிக்கு, பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும்ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

