/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபால் போட்டியில் முதலிடம்; தன்வசப்படுத்திய அன்னை அணி
/
வாலிபால் போட்டியில் முதலிடம்; தன்வசப்படுத்திய அன்னை அணி
வாலிபால் போட்டியில் முதலிடம்; தன்வசப்படுத்திய அன்னை அணி
வாலிபால் போட்டியில் முதலிடம்; தன்வசப்படுத்திய அன்னை அணி
ADDED : செப் 02, 2025 08:53 PM
கோவை; கற்பகம் பல்கலையில் நடந்த பள்ளி மாணவியருக்கான வாலிபால் போட்டியில், 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி அணியினர், 2-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி.ஜி. கன்யா குருகுலம் அணியை வீழ்த்தினர்.
இரண்டாம் அரையிறுதியில், அன்னை வயலெட் மெட்ரிக் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. இறுதிப்போட்டியில், அன்னை வயலெட் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கிருஷ்ணம்மாள் பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், எஸ்.வி.ஜி.வி. பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி.ஜி. கன்யா குருகுலம் அணியை வென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
அதேபோல், கிருஷ்ணா கல்லுாரி வளாகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியில், 465 மாணவர்கள் பங்கேற்றனர். நிறைவில், சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி மாணவர் ஆகாஷ் முதலிடம் பிடித்தார்.