/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக தோட்டக்கலை துறைக்கு தேசிய அளவில் முதல் பரிசு
/
தமிழக தோட்டக்கலை துறைக்கு தேசிய அளவில் முதல் பரிசு
தமிழக தோட்டக்கலை துறைக்கு தேசிய அளவில் முதல் பரிசு
தமிழக தோட்டக்கலை துறைக்கு தேசிய அளவில் முதல் பரிசு
ADDED : மே 20, 2025 07:04 AM
பொள்ளாச்சி : மத்தியபிரதேசத்தில் நடந்த கண்காட்சியில், தமிழக தோட்டக்கலைத்துறை முதல் பரிசை வென்றது.
மத்தியபிரதேச மாநிலம், போபாலில் ஆசியா வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை, உணவு தொழில்நுட்ப கண்காட்சி, கடந்த, 14 முதல், 16ம் தேதி வரை நடந்தது. அதில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்தும் பங்கேற்று அரங்கு அமைத்தனர்.
இதில், தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில், ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தலைமையில் தோட்டக்கலைத்துறையினர் ஐந்து பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். சிறப்பாக, 'ஸ்டால்' வடிவமைத்ததற்காக, தேசிய அளவில் முதல் பரிசை தமிழக தோட்டக்கலைத்துறை பெற்றது.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது: மத்திய அரசு சார்பில், மத்திய பிரதேசம் போபாலில் நடந்த ஆசியா வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை, உணவு தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்று தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் உள்ளிட்டவை குறித்தும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.மேலும், கோகோ விளைபொருளை கொண்டு, 'ப்ரைடு ஆப் தமிழ்நாடு - நீலகிரி வரையாடு' உருவாக்கப்பட்டது.
சோம்பு, கசகசா, வெந்தயம், பட்டை போன்றவற்றை பயன்படுத்தி மரகதப்புறா உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டன. இதை பார்வையிட்ட பலரும் வியந்து பார்த்தனர். அதனால், முதல் பரிசு வழங்கப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.