UPDATED : செப் 08, 2026 09:55 PM
ADDED : செப் 08, 2026 09:34 PM
கோவை: ஒடிசா மாநிலம் சம்பல்பூர் - போத்தனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (08311) செப்.9 முதல் 25 வரை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
புதன் கிழமை சம்பல்பூரிலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு போத்தனூர் சந்திப்பை வந்தடையும்.
ரயில் எண்.08312 போத்தனூர் - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில், செப்.11 முதல் 27 வரை வெள்ளிக்கிழமைகளில் போத்தனூர் சந்திப்பிலிருந்து பகல் 1 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை அடையும்.
சம்பல்பூர், பர்காரா சாலை, பாலங்கிர், டிட்லாகர், கேசிங்கா, முனிகுடா, ராயகடா, பார்வதிபுரம், பொப்பிலி, விஜயநகரம், கொட்டவலசா, துவ்வாடா, அனகாபள்ளி, சமல்கோட், ராஜமுந்திரி, நிடடவோலு, பீமவரம் டவுன், கைக்கலூர், குடிவாடா, விஜயவாடா, தெனாலி, சிரலா, ஒங்கோல், நெல்லூர், கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்லும்.
