/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.பி.டி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
/
என்.பி.டி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
என்.பி.டி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
என்.பி.டி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 11, 2025 09:39 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.பி.டி., கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா நடந்தது. என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் இணைச் செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார்.செயலாளர் ராமசாமி தலைமை வகித்து, கல்லுாரியின் பாடநெறி பயன்கள், வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து பேசினார்.
கோவை டெல்டா ஸ்குவாட் படை கமாண்டர் ஈசன், ''மாணவர்கள் சுய கட்டுப்பாடு, குழுப்பணி, தனித்தன்மை மற்றும் பொறுப்புள்ள குடிமகன்களாக இருத்தல் வேண்டும்,' என்றார்.
சென்னை பிரிசிசன் குழும நிறுவன தலைவர் பாலசுப்ரமணியன், 'தொழில்முறை நெறிகள், மொழித்திறன், சமூகத் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவு,' குறித்து பேசினார். திருப்பூர் மெஜெஸ்டிக் குழும நிறுவன தலைவர் கந்தசாமி, 'கல்வி, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு' ஆகிய தலைப்புகளில் பேசினார்.
கல்லுாரி முதல்வர் அசோக், துறைத் தலைவர்கள் மற்றும் முதலாமாண்டு விரிவுரையாளர்களை அறிமுகப்படுத்தினார்.விழாவில், முன்னாள் மாணவர் சங்க அமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளர் அழகப்பா ஆறுமுகம், தலைவர் கலைமணி, பொருளாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், முதலாமாண்டு துறைத் தலைவர் காந்திமதி நன்றி கூறினார்.