/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ. கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
/
பி.ஏ. கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
ADDED : ஆக 22, 2025 11:47 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பி.ஏ. பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரி தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். துணை தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் மணிகண்டன், கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் யுவராஜா, சான்றோர்கள் விழாவை துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித்துறை ஒருங்கிணைப்பாளர் கவிதை சித்தர் நெல்லை ஜெயந்தா, அண்ணா, ரத்தன் டாடா, விவேகானந்தர், கண்ணதாசன் போன்ற பல்வேறு சாதனையாளர்களை கூறி விளக்கி பேசினார்.
மேலும், உழைப்பின் முக்கியத்துவம், நட்பின் மகத்துவம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் போன்றவை உணர வேண்டும். பெற்றோரின் கனவுகள் மெய்பட மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், என பேசினார்.

