/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்பு துவக்க விழா
/
முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்பு துவக்க விழா
ADDED : ஜூன் 23, 2025 11:27 PM
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கோவை பாரதியார் பல்கலை இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பாதுகாப்பு உயிரி பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகத்தின் விஞ்ஞானி கதிர்வேலு பங்கேற்று பேசுகையில், நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு மாணவர்கள் முக்கிய பங்கினை ஆற்ற வேண்டும். பாலிடெக்னிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்திய அணுசக்தி துறை, ராணுவ தளவாடங்கள், செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி துறை ஆகியவற்றில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் நடந்த வாரிய தேர்வில் முதலிடம் பெற்ற ஒவ்வொரு துறை சார்ந்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகத்தின் முதன்மை நிர்வாகி மகேஷ் குமார், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.