/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் தேக்கம் அருகே மீன் கழிவு குவிப்பு
/
நீர் தேக்கம் அருகே மீன் கழிவு குவிப்பு
ADDED : ஆக 24, 2025 11:42 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சோழனூர் செல்லும் ரோட்டோரம் நீர் தேக்கம் அருகே, மீன் கழிவு கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் அருகே சோழனூர் செல்லும் ரோட்டோரம் நீர் தேக்க பகுதி உள்ளது. தற்போது பெய்யும் மழையால் நீர் தேங்கியுள்ளது.
இவ்வழியில் செல்பவர்கள் சிலர், கடந்த சில நாட்களாக நீரில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் இதர கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு தேங்கியிருக்கும் நீர் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய விளைநிலம் பாதிப்படைகிறது. தற்போது, இங்கு மீன் கழிவும் கொட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. நோய் பரவவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரோட்டை கடக்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.
இங்கு கழிவு குவிப்பதை தடுக்க வேண்டும். புதர் செடிகளை அகற்றி ரோட்டோரம் தடுப்புகள் அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.