/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொள்ளை முயற்சி; ஐந்து பேர் கைது
/
கொள்ளை முயற்சி; ஐந்து பேர் கைது
ADDED : ஜன 23, 2025 11:59 PM
கோவை; செல்வபுரம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்வபுரம் எஸ்.ஐ., தினேஷ் பாபு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு செல்வபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தெலுங்குபாளையம் --- வேடபட்டி ரோடு பகுதியில் பகுதியில் சிலர் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றிருப்பதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஆறு பேர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் அழைத்த போது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசாரும் அவர்களை துரத்தி சென்றனர்.
இதில் ஐந்து பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகதீஷ், 24, நவுபல், 22, சொக்கம்புதுாரை சேர்ந்த மோகன்குமார், 20, வால்டர் வில்லியம், 20, நித்தின், 19 ஆகியோர் என்பதும் தப்பி ஓடியது கார்த்தி என்பதும் தெரியவந்தது.
மேலும், அவர்கள் செல்வபுரம் பகுதியில் பூட்டி இருக்கும் பெரிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

