ADDED : ஆக 01, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பீளமேடு, உடையாம்பாளையம், காமராஜர் காலனி பகுதியில், 2024ல், சிறுவர்களுக்கிடையே கோஷ்டி மோதல்ஏற்பட்டது. இதில், 16 வயதுடைய சிறுவனை, எட்டு பேர் சேர்ந்து, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, கொலை செய்ய முயன்றனர்.
பீளமேடு போலீசார் விசாரித்து, 17 வயதுக்கு உட்பட்ட,ஐந்து சிறுவர்களை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அவர்கள் மீது, சிறார் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து சிறுவர்களுக்கு, தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, நேற்றுதீர்ப்பளித்தார்.