/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூப்பர் லீக் ஹாக்கி போட்டி களம் காணும் ஐந்து அணிகள்
/
சூப்பர் லீக் ஹாக்கி போட்டி களம் காணும் ஐந்து அணிகள்
சூப்பர் லீக் ஹாக்கி போட்டி களம் காணும் ஐந்து அணிகள்
சூப்பர் லீக் ஹாக்கி போட்டி களம் காணும் ஐந்து அணிகள்
ADDED : அக் 27, 2025 10:14 PM
கோவை: சூப்பர் லீக் ஹாக்கி போட்டியில் பங்கேற்க, ஐந்து அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், சீனியர் ஹாக்கி லீக் போட்டிகள், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரி மைதானத்தில் நடத்தப்பட்டன. இதிலிருந்து சூப்பர் லீக்'குக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில், பி.எஸ்.ஜி. காஸ் ஹாக்கி கிளப், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரி, ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி அணி, மாருதி உடற்கல்வி கல்லுாரி, காருண்யா பல்கலை அணிகள் தேர்வு பெற்றுள்ளன.
அணிகளுக்கு இடையேயான போட்டி, நவம்பர் முதல் வாரத்தில், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் மாருதி உடற்கல்வி கல்லுாரி மைதானத்தில் நடத்தப்பட உள்ளன.