/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக எடையுடன் கனிமவளம்; ஐந்து டிப்பர் லாரிகள் பறிமுதல்
/
அதிக எடையுடன் கனிமவளம்; ஐந்து டிப்பர் லாரிகள் பறிமுதல்
அதிக எடையுடன் கனிமவளம்; ஐந்து டிப்பர் லாரிகள் பறிமுதல்
அதிக எடையுடன் கனிமவளம்; ஐந்து டிப்பர் லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூன் 29, 2025 11:17 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அதிக பாரம் ஐந்து டிப்பர் லாரிகளை பிடித்து வருவாய்த்துறையினர், டிரைவர்களுடன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி அருகே, தாசில்தார் வாசுதேவன் தலைமையிலான வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஏழு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனையிட முற்பட்டனர். அதில், இரு டிப்பர் லாரிகள் கடந்து செல்லவே, ஐந்து டிப்பர் லாரிகளை மடக்கிப்பிடித்தனர்.
அப்போது, லாரியில், நிர்ணயிக்கப்பட்ட 12 டன் அளவை விட, 67 டன் அளவில், கனிமவள கற்கல் ஏற்றி வந்ததும், உரிய ஆவணங்கள் இன்றி, கற்களை கேரள மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் நாகராஜ், பொள்ளாச்சி கிழக்கு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், ஐந்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, இரு லாரிகள், தேடப்பட்டும் வருகின்றன.