sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டாஸ்மாக்குக்கு நிகராக எப்.எல். 2 'பார்'கள் திறப்பு; எண்ணிக்கை அதிகரிப்பதால் குற்றங்கள் பெருகும்

/

டாஸ்மாக்குக்கு நிகராக எப்.எல். 2 'பார்'கள் திறப்பு; எண்ணிக்கை அதிகரிப்பதால் குற்றங்கள் பெருகும்

டாஸ்மாக்குக்கு நிகராக எப்.எல். 2 'பார்'கள் திறப்பு; எண்ணிக்கை அதிகரிப்பதால் குற்றங்கள் பெருகும்

டாஸ்மாக்குக்கு நிகராக எப்.எல். 2 'பார்'கள் திறப்பு; எண்ணிக்கை அதிகரிப்பதால் குற்றங்கள் பெருகும்


ADDED : மார் 18, 2025 04:05 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சியில், 'டாஸ்மாக்' மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படும் இடங்களில், எப்.எல்.2 மதுக்கடைகள் திறக்கப்படுவதாக தகவல்கள் பரவுகின்றன. இதனால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும், போதை ஊசி பயன்படுத்துபவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை தெற்கு மாவட்டத்தில், 108 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அதில், பொள்ளாச்சி நகர்மற்றும் நகரையொட்டி மட்டும், 11 டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன; ஏழு'எப்.எல். 2' பார்கள் செயல்படுகின்றன. ஆனைமலை பகுதியில், 11 டாஸ்மாக் கடைகளும், மூன்று 'எப்.எல்., 2' பார்களும் உள்ளன.

'எப்.எல்., 2' பார்கள் காலை, 11:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை இயங்குகின்றன. உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், யார் வேண்டுமானாலும், 'எப்.எல்., 2' பார்களில் மது குடிக்கலாம் என்ற நிலைமையே உள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு இணையாக, 'எப்.எல்., 2' பார்கள் எண்ணிக்கை உயர்வதாக புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் பார் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன. அந்தப்பகுதி வழியாக பொதுமக்கள் சென்று வரவே அச்சப்படும் சூழல் இருந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு அந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டன. தற்போது, எப்.எல்.,2 கடை மட்டும் செயல்படுகிறது.

டாஸ்மாக் கடை கொண்டு வர முயற்சித்த நிலையில், எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கூடுதலாக அங்கு 'எப்.எல்., 2' பார் கொண்டு வர இரு திராவிட கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகள் இணைந்து, கடை அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

காந்திசிலை அருகே 'எப்.எல்.,3' பார் கொண்டு வர முயற்சி நடக்கிறது. அப்பகுதியில் மருத்துவமனைகள், ேஹாட்டல்கள் இருப்பதுடன், காந்தி சிலையும் இருப்பதால் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கடைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோட்டில், இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அந்த ரோட்டின் அருகே, மாவட்ட கல்வி அலுவலகம் இருப்பதுடன், நேதாஜி ரோடு பள்ளி, நகராட்சி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவ்வழியாகத்தான் செல்கின்றனர். பள்ளிகள் அருகே இருப்பதால், 'குடி'மகன்கள் அட்டகாசம் அதிகம் உள்ளதாக கூறி, இரண்டு கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த இடத்தில் ஒரு 'எப்.எல்., 2' பார் கொண்டு வருவதற்கானஆயத்தப்பணிகள் நடைபெறுகின்றன. பல்லடம் ரோட்டில் ஒரு 'எப்.எல்., 2' கடை வருகிறது. 'எப்.எல்., 2' அதிகரிக்கும் போது குற்ற செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

இரு திராவிட கட்சிகளும், டாஸ்மாக் மதுக்கடைகள் ஏலம் எடுப்பது, எப்.எல். 2 பார் அனுமதி பெற மறைமுக கூட்டணி போடுவது தொடர்கிறது. இதனால், கடைகள் திறப்பதில் எந்தவித பிரச்னையும் ஏற்படுவதில்லை. தற்போது, நான்கு எப்.எல்., 2 பார்கள் துவங்க முயற்சிகள் நடக்கிறது. அவ்வாறு அமைக்கப்பட்டால், டாஸ்மாக் கடை எண்ணிக்கைக்கு ஏற்பஎப்.எல்., 2 பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தொழில் போட்டி காரணமாக விதிமுறைகள் மீறப்படும். அரசு உரிய கவனம் செலுத்தி, பொள்ளாச்சி நகரில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை உள்ள இடங்களில், அந்த கடைகளை மூடுவதுடன், புதிய எப்.எல்., 2 பார்கள் திறக்கவும் அனுமதி அளிக்க கூடாது.

மதுக்கடைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பொள்ளாச்சி நகரில் இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு, கூறினர்.

24 மணி நேரமும் மது விற்பனை!

பொள்ளாச்சி நகரில், டாஸ்மாக் மதுக்கடைகள் மதியம், 12:00 மணிக்கு திறக்கப்படுவது சட்ட விதியாகும். ஆனால், மதுக்கடைகளில் எவ்வித தடையுமின்றி, 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. காலை நேரங்களிலேயே மதுவாங்கி 'குடி'மகன்கள் குடிக்கின்றனர்.கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டு, டாஸ்மாக் கடை ஊழியர்களும், அரசியல் கட்சியினரும் கல்லா கட்டுவதாக புகார் எழந்துள்ளது.அனைத்து தரப்பினரும், 'கவனிப்பு' பெறுவதால், முறைகேடாக மது விற்பதை தடுக்க யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை, என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



-- நமது நிருபர்- -






      Dinamalar
      Follow us