ADDED : பிப் 13, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே, தே.மு.தி.க., சார்பில் கொடி நாள் கொண்டாடப்பட்டது.
கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே தே.மு.தி.க., சார்பில்,24ம் ஆண்டு கொடி நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தே.மு.தி.க., கோவை மாவட்ட கழக செயலாளர் ஜெகன், கட்சி கொடி ஏற்றினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பேரூராட்சி செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் சரண்பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

