/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராணுவ வீரர்களுக்கு கொடிநாள் நிதி
/
ராணுவ வீரர்களுக்கு கொடிநாள் நிதி
ADDED : டிச 28, 2025 05:10 AM

கோவை: கோவை ரூட்ஸ் குரூப் நிறுவன பணியாளர்கள் மற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் கொடிநாள் நிதி வழங்கப்பட்டது.
கொடிநாள் நிதி, 18,44,781 ரூபாயை கலெக்டர் பவன்குமாரிடம், ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கவிதாசன் மற்றும் பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி ஆகியோர் கலெக்டர் பன்குமாரை நேரில் சந்தித்து வழங்கினர்.
நமது நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக நாட்டுப்பற்று மிக்க குடிமகனாக பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிதியை வழங்கினர் என ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

