/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்; சித்தாபுதுாரில் பக்தர்கள் வெள்ளம்
/
ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்; சித்தாபுதுாரில் பக்தர்கள் வெள்ளம்
ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்; சித்தாபுதுாரில் பக்தர்கள் வெள்ளம்
ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்; சித்தாபுதுாரில் பக்தர்கள் வெள்ளம்
ADDED : மார் 27, 2025 12:17 AM
கோவை; சித்தாபுதுார் ஐயப்பன் கோவில், 56ம் ஆண்டு விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
சித்தாபுதுார் சின்னசாமிநாயுடு சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில், நேற்று மாலை கொடியேற்ற விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
மங்கள வாத்தியங்கள், கேரள பஞ்சவாத்தியங்கள் முழங்க, கோவில் கொடிமரத்தில் ஆண்டுவிழா கொடியை, கோவில் தந்திரி பாலக்காட்டில்லத்து சிவப்பிரசாத் நம்பூதிரி ஏற்றினார்.
அப்போது பக்தர்கள், 'சுவாமியே சரணம் ஐயப்பா' என சரணகோஷம் எழுப்பினர். தொடர்ந்து முத்தாயம்பகை செண்டைமேளம் கச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.
இன்று காலை கோவிலில் உற்சவ பூஜைகளும், விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், நிறைபறை சமர்ப்பித்தலும் இரவு 7:30 மணிக்கு தபஸ்யாமிருதம் நடனப்பள்ளி வழங்கும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.