/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித அந்தோணியார் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
புனித அந்தோணியார் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூன் 22, 2025 11:28 PM

மேட்டுப்பாளையம்: புனித அந்தோணியார் ஆலயத்தில், தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம், நேற்று காலை திருப்பூர் குமார் நகர் பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமையில் திருப்பலியும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து புனித அந்தோணியாரின் உருவம் பொறித்த கொடியை ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக பாதிரியார், சிஸ்டர்கள் எடுத்து வந்தனர்.
அதன் பின், தீர்த்தம் தெளித்து மந்திரிக்கப்பட்டு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
24ம் தேதி கோவை ஆயரின் செயலர் பிளாட்வின் ஆண்டனி காலை, 11:30 மணிக்கு மாலை, 6:00 மணிக்கு திருப்பலியை நிறைவேற்றி, ஆராதனையையும் நிகழ்த்த உள்ளார். 26 ஆம் தேதி ஊட்டி கேத்தி பங்கு பாதிரியார் ஜெரோம், 27 ம் தேதி திண்டுக்கல் மறைமாவட்ட பாதிரியார்கள் தாமஸ் ஜான் பீட்டர், ஜேக்கப், 28ம் தேதி கோவை பாதிரியார் ஆல்பர்ட் செல்வராஜ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றி, ஆராதனையும் நிகழ்த்த உள்ளனர்.
29ம் தேதி காலை, 8:15 மணிக்கு கோவை மறை மாவட்ட பொருளாளர் பாதிரியார் ஆண்டனி செல்வராஜ் தலைமையில், திருவிழா சிறப்பு கூட்டு பாடற்பலி நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து மாலை, 5:30 மணிக்கு தேர் திருவிழா சிறப்பு திருப்பலி பாதிரியார் விக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மண்ணின் மைந்தர்கள், முன்னாள் பங்கு பாதிரியார்கள் மறை வட்ட குருக்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆலயத்தில் இருந்து புறப்படும் அந்தோணியார் தேர், நகரின் முக்கிய வீதியில் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை அடைய உள்ளது. அதைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் பிலிப், பக்த சபைகள், பங்கு மக்கள், அன்பியத்தினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.