/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சகாய அன்னை தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
சகாய அன்னை தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : செப் 23, 2025 09:07 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில், தேர் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள வெல்ஸ்புரத்தில், இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கொடியேற்றம் பங்கு பாதிரியார் பிலிப் தலைமையில் நடந்தது. நல்லாயன் குருமட விவிலிய பேராசிரியர் பாதிரியார் டேவிட் ஜான் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றி, வேண்டுதல் தேர் பவனியை துவக்கி வைத்தார். இதையடுத்து சகாய அன்னையின் உருவம் பொறித்த கொடியை தீர்த்தம் தெளித்து கொடியேற்றி வைத்தார்.
இன்று (24ம் தேதியிலிருந்து), 27ம் தேதி வரை நான்கு நாட்கள், மாலை 6:00 மணிக்கு ஆரோக்கியசாமி, ஞானப்பிரகாசம், பிச்சைமுத்து, லியோ ஆகிய பாதிரியார்கள் நவநாள் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றி, ஆராதனை செய்ய உள்ளனர். 28ம் தேதி மாலை, 5:00 மணிக்கு ஈரோடு சீமா சமூகப் பணி மைய இயக்குனர் பாதிரியார் ரொசாரியோ வினோத் தலைமையில், திருவிழா கூட்டு பாடத் திருப்பலியும், அதைத்தொடர்ந்து மாலை, 7:00 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெற உள்ளது. முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் பிலிப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.