/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித ஜெபமாலை அன்னை தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
புனித ஜெபமாலை அன்னை தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : செப் 27, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை சர்ச் தேர்த்திருவிழாவை ஒட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது.
கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை பசலிக்கா சர்ச், தேர்த்திருவிழாவை ஒட்டி நேற்று காலை,8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, தினமும் திருப்பலி, மறையுரை நடக்க உள்ளது. வரும், 4ம் தேதி கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டு பாடல்பலி நடக்கிறது.
வரும், 6ம் தேதி இரவு, 7:00 மணிக்கு அன்னையின் அலங்கார திருத்தேர் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை சர்ச் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.