/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் இன்று கொடியேற்றம்
/
புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் இன்று கொடியேற்றம்
ADDED : செப் 26, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில், இன்று தேர் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை பசலிக்கா சர்ச், நூற்றாண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டு தோறும் அக்., மாதம் தேர் திருவிழா சிறப்பாக நடக்கும். இந்தாண்டு தேர் திருவிழா இன்று காலை,8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தினமும் திருப்பலி, மறையுரை நடக்கிறது. வரும், 4 ம் தேதி கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டு பாடல் பலி நடக்கிறது. வரும், 6 ம்தேதி இரவு, 7:00 மணிக்கு அன்னையின் அலங்கார திருத்தேர் பவனி நடக்கிறது.