ADDED : ஏப் 13, 2026 05:23 AM

அ நிறம் | அளவு
கருமத்தம்பட்டி: சட்டசபை தேர்தலை ஒட்டி, கருமத்தம்பட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில், சட்டசபை தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையிலும், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இதையொட்டி, கருமத்தம்பட்டியில் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில், சப் ---டிவிசனில் உள்ள ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் பங்கேற்றனர். கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து பவர் ஹவுஸ் கார்னர் வரை அணிவகுப்பு நடந்தது.
