/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிக்கம்பங்கள் அதிரடியாக அகற்றம்
/
கொடிக்கம்பங்கள் அதிரடியாக அகற்றம்
ADDED : ஏப் 07, 2025 09:56 PM
அன்னுார்; 'அனைத்து கட்சியினரும் கொடிக்கம்பங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்,' என பேரூராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து கம்பம் அகற்றும் பணி துவங்கி உள்ளது.
அன்னுார் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், 'அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும், கடந்த 3ம் தேதி அனுப்பிய கடிதத்தில், 'மதுரை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இரு வாரங்களுக்குள் தங்கள் சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் தி.மு.க., கொடி கம்பங்களை, ஓதிமலை ரோடு, கைகாட்டி ஆகிய இடங்களில் தி.மு.க., நகர செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தாங்களாகவே அகற்றி கொண்டனர்.
'விரைவில் மற்ற கட்சிகளும், தங்கள் கொடிக்கம்பங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்,' என பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

