/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை செல்லும் விமானங்கள் ரத்து
/
சென்னை செல்லும் விமானங்கள் ரத்து
ADDED : டிச 01, 2024 01:12 AM
கோவை: கோவையிலிருந்து சென்னை செல்லும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
சென்னையில் பெய்த கனமழையால் விமான நிலைய ஓடுதளம் மழைநீரில் முழ்கியது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களும், அங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து சென்னைக்கும் நேற்று விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 10:45, 11:35, மாலை 3:45, 4:00 மணிக்கு சென்னை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமானநிலையம் தயாரான பிறகு இண்டிகோ, ஏர்இண்டியாவிமானம் செல்லும். சென்னை செல்லும் விமானங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், பல பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

