/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிந்தாமணி சந்திப்பில் பாயும் புலி சிலை
/
சிந்தாமணி சந்திப்பில் பாயும் புலி சிலை
ADDED : ஜூலை 25, 2025 09:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகராட்சியின் சார்பில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை சிந்தாமணி சந்திப்பில், புலி உருவச் சிலை திறப்புவிழா நடந்தது.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியின் செயலர் வாசுகி, பொருளாளர் பரமசிவன் ஆகியோர் சிலையைத் திறந்து வைத்தனர்.
வரும் 29ம் தேதி, உலக புலிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், 12 அடி நீளத்தில், 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத் துாக்கிப் பாயும் நிலையில் புலி சிலை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை நிறுவி, பராமரித்தலுக்கான பொறுப்பையும், செலவையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி ஏற்றுக்கொண்டுள்ளது.