/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடை
/
கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடை
கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடை
கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : ஜூலை 27, 2025 09:19 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு, வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். ஆழியாறில் உள்ள கவியருவியில், சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகள், மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஆழியாறு வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.